/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டெங்கு தடுப்பு பணியில் 1,600 களப்பணியாளர்'
/
'டெங்கு தடுப்பு பணியில் 1,600 களப்பணியாளர்'
ADDED : ஜூலை 21, 2024 09:38 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாது-காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
பருவமழை பெய்து வரும் நிலையில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள், சாதாரண சளி, காய்ச்சல் போன்வற்றை தடுக்க, மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்டை மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் உள்-ளதால் கொசு புழு ஒழிப்பு நடவடிக்கையை தீவிர-மாக கண்காணிக்க வேண்டும். தண்ணீர் தேங்-காமல் இருக்கும்படி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, சிகிச்சை வழங்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் சீட்டு இன்றி காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை-களை எடுப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.சேலம் மாவட்டத்தில், 1,600 தற்காலிக களப்ப-ணியாளர்கள் நியமிக்கப்பட்டு, காய்ச்சல் தடுப்பு பணியாக டெங்கு கொசு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், கிருமி நாசினி துாவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். சித்த மருத்துவத்துறை சார்பில் தினமும், 70 இடங்களில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.நலப்பணி இணை இயக்குனர் ராதிகா, துணை இயக்குனர் சவுண்டம்மாள், மாநகர நல அலு-வலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.