/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் உதவி எண் '181'விழிப்புணர்வு 'வாக்கத்தான்'
/
மகளிர் உதவி எண் '181'விழிப்புணர்வு 'வாக்கத்தான்'
ADDED : மார் 09, 2025 01:53 AM
மகளிர் உதவி எண் '181'விழிப்புணர்வு 'வாக்கத்தான்'
சேலம்:-சேலம் காந்தி மைதானத்தில், மாநகர போலீஸ் சார்பில், மகளிர் உதவி எண்: 181 குறித்து, விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி நேற்று நடந்தது. கமிஷனர் பிரவீன்குமார் அபினபு முன்னிலை வகித்தார். கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
அங்கிருந்து சுந்தர் லாட்ஜ், குமாரசாமிப்பட்டி, அஸ்தம்பட்டி வழியே சென்ற வாக்கத்தான், மீண்டும் மைதானத்தில் முடிந்தது. அப்போது மக்கள் இடையே மகளிர் உதவி எண், 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
துணை கமிஷனர்கள் சிவராமன், வேல்முருகன், கீதா உள்ளிட்ட போலீசார், கல்லுாரி மாணவியர், ஆசிரியர்கள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.