/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்
/
மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்
ADDED : பிப் 26, 2025 02:00 AM
மது குடிக்க பணம்திருடிய 2 பேர் சிக்கினர்
சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், திருப்புலி நாடு பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை, 60; விவசாயி. இவர், சில நாட்களுக்கு முன் மிளகு அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் மகன் மணி, 23, அவரது நண்பர், 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், செல்லதுரை வீட்டில் இருந்து பணம், ஒரு பவுன் மோதிரத்தை திருடி விற்று மது குடித்துள்ளனர். வீட்டில் பணம், மோதிரம் திருடு போனதை அறிந்த செல்லதுரை அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகாரளித்தார். புகார்படி, பணம் திருடிய மணி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

