/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கஒரு வாரத்தில் 225 இடங்களில் ஆய்வு
/
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கஒரு வாரத்தில் 225 இடங்களில் ஆய்வு
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கஒரு வாரத்தில் 225 இடங்களில் ஆய்வு
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கஒரு வாரத்தில் 225 இடங்களில் ஆய்வு
ADDED : மார் 18, 2025 01:56 AM
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கஒரு வாரத்தில் 225 இடங்களில் ஆய்வு
சேலம்:சேலம் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் உடல்நிலை, உளவியல் சார்ந்த விழிப்புண ர்வு ஏற்படுத்தவும், போதை பொருள் தீமை குறித்து வீடியோ ஒளிபரப்பவும், கடந்த ஒரு வாரத்தில், 122 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
போதை பொருட்கள் பயன்பாடு குறித்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒரு வாரத்தில் மட்டும், 225 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க, 260 வாகனங்கள், 406 கடைகள், 586 கல்வி நிறுவனங்கள் அருகே என ஆய்வு மேற்கொண்டு விதிமீறியோருக்கு, 3.53 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், கலால் உதவி கமிஷனர் ஜெயக்குமார், மாநகர் நல அலுவலர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.