/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு29 விவசாயிகள் கைது
/
குப்பை கொட்ட எதிர்ப்பு29 விவசாயிகள் கைது
ADDED : பிப் 12, 2025 01:05 AM
குப்பை கொட்ட எதிர்ப்பு29 விவசாயிகள் கைது
இடைப்பாடி: இடைப்பாடி அருகே அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்ட, குறுக்குப்பாறையூரில், 2 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை, சேலம் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்தது. தொடர்ந்து, 15வது நிதிக்குழு மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தில், 64.50 லட்சம் ரூபாய் மதிப்பில், திடக்கழிவு மேலாண் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, குப்பை கொட்ட விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போலீசாரும் கைது செய்து மாலையில்
விடுவிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று காலை கட்டுமான பணி நடந்தது. இதை தடுக்கும்படி, அங்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலர் பெருமாள் தலைமையில் விவசாயிகள், 29 பேர், கட்டுமானப்பணியை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்ககிரி தாசில்தார் வள்ளமுனியப்பன்(பொ), பேச்சு நடத்தினார். ஆனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால், தேவூர் போலீசார், 29 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். ஏற்கனவே இப்பிரச்னைக்கு, 3 முறை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டிருந்தனர்.