/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
15 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
/
15 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
ADDED : ஆக 01, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேச்சேரி அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சுந்தராம்மாள், 80. இவர் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார், 45, மூதாட்டி நகையை பறிக்க முயன்றார். அவர் கூச்சலிட, மகேந்திரகுமார் தப்பி ஓடினார். இது-குறித்து சுந்தராம்மாள், 2004ல், மேச்சேரி ஸ்டேஷனில் அளித்த புகார்படி, மகேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் நடந்தது.
ஜாமினில் வந்த மகேந்திரகுமார், 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்த அவரை, நேற்று மேச்சேரி போலீசார் கைது செய்தனர்.