/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேளாண் இயந்திரம், கருவிகள் கண்காட்சி
/
வேளாண் இயந்திரம், கருவிகள் கண்காட்சி
ADDED : ஆக 31, 2024 01:31 AM
சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி திடலில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்து, மாவட்ட அளவில் கண்காட்சி நேற்று நடந்தது.
கலெக்டர் பிருந்தாதேவி கண்காட்சியை திறந்து வைத்தார். அதில், 12 நிறுவனங்கள் காட்சிப்படுத்திய டிராக்டர், பவர் ட்ரில்லர், பவர் வீடர் உள்பட, 50 இயந்திரங்கள், கட்டர், விதைக்கும் கருவி, மருந்து தெளிப்பான் போன்ற, 50
சிறு கருவிகளை அடுத்தடுத்து பார்வை யிட்டார். தொடர்ந்து டிராக்டர் சர்வீஸ் செய்வது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகள், தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், புது தொழில்-நுட்பம் கையாள்வது குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
தவிர வேளாண் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாட-கைக்கு விடப்படும் வேளாண் கருவிகள், தனியே காட்சிப்படுத்-தப்பட்டன. இதில் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள், வேளாண் பொறி-யியல் துறை செயற்பொறியாளர்கள் குமரன், விஜயகுமார் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.