ADDED : செப் 07, 2024 08:16 AM
ஓமலுார்: புத்தக வாசிப்பு தினத்தையொட்டி ஓமலுார் அருகே தொளசம்-பட்டி ஊர்புற நுாலகம் சார்பில், அங்குள்ள அரசு மேல்நிலைப்-பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நுாலகர் குமார்மாணிக்கம் தலைமை வகித்தார். அதில் பல்வேறு போட்-டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பல்வேறு அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில், 'பயப்படாதே நீ போர்க்குதிரை' தலைப்பில் தன்னம்பிக்கை குறித்து மாணவர்களுக்கு சொற்பொ-ழிவு நடந்தது. ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கலை இலக்கிய விழா
முத்துநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் கலை இலக்கிய விழா தலைமை ஆசிரியை கோசலை தலைமையில் நடந்தது. மாணவ, மாணவியர் பல்வேறு வேடங்களை போட்டும், ஆடல், பாடல், குழு, தனி நபர் நடனமும் செய்து அசத்தினர்.
தவிர ஓவியப்போட்டி, களிமண் சிற்பங்கள், காய், கனிகளால் சிற்பம் செய்தல் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு 'மஞ்சப்பை' பரிசாக வழங்கப்பட்டன. தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், பள்ளி மேலாண் குழு உறுப்பி-னர்கள் பங்கேற்றனர்.