/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் சிறுவன் காயம் உறவினர்கள் சாலை மறியல்
/
பள்ளியில் சிறுவன் காயம் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஆக 13, 2024 06:50 AM
வாழப்பாடி:பள்ளியில் சிறுவன் தாக்கப்பட்டதாக, உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன், அவரது வகுப்பை சேர்ந்த மற்றொரு மாண-வனை நேற்று மதியம், 2:30 மணிக்கு தாக்கியுள்ளார். இதில் காய-மடைந்த சிறுவனுக்கு வயிற்றின் அருகே ரத்த கசிவு ஏற்பட்டுள்-ளது.
இதுகுறித்து, சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்-டது. பள்ளி வந்த பெற்றோர், சிறுவனை, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது
குறித்து ஆசிரியர்கள் முறையாக பதில் அளிக்காததால், தாக்கிய சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சிறு-வனின் பெற்றோர், உறவினர்கள் வெள்ளாளகுண்டம் அரசு மேல்-நிலைப்பள்ளி முன் நேற்று மாலை, 6:30 மணிக்கு சாலை மறி-யலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.