/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை முகாம்'
/
'18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை முகாம்'
'18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை முகாம்'
'18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை முகாம்'
ADDED : ஆக 31, 2024 01:30 AM
சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லுாரியில், 29வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி பொறுப்பு முதல்வர் மணிகாந்தன் வர-வேற்றார். அதில், 2018 -19 கல்வியாண்டில் சேர்ந்து, எம்.பி.பி.எஸ்., முடித்தோருக்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், பட்டம் வழங்கினார். அதில் தங்கப்ப-தக்கம் பெற்ற வைஷ்ணவி உள்பட, 50 மாணவியர், 46 மாண-வர்கள் பட்டம் பெற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகளை அடுத்து நிறை-வாக, சேலத்தில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் அதிநவீன, 'பெட்' சிடி ஸ்கேன், சென்னை, மதுரை அரசு கல்லுாரிகளில்
மட்டும் இருந்தன. ரப்பர் தோட்டம், தோல் தொழிற்சாலை, சாயக்கழிவு உள்ள மாவட்டங்-களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பது கண்டுபிடித்து, 3 ஆண்டுகளில், சேலம், கோவை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகர்-கோவில் என,
5 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், 'பெட் சிடி ஸ்கேன்' நிறுவப்பட்டுள்ளன. புற்றுநோய் தாக்கத்தை கட்டுப்ப-டுத்த, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோ-தனை முகாம், தமிழகம் முழுதும், 38 வருவாய்
மாவட்டங்களில் விரைவில் தொடங்க உள்ளது.பெரியம்மை போன்று குரங்கம்மை என்ற அவசர நிலை அறிவித்-ததும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட முதல் மாநிலம் தமி-ழகம். பன்னாட்டு விமான நிலையங்களில் வெப்பநிலை கண்டறிந்து நோய் பாதிப்பை கண்டுபிடிக்க, கருவிகள் பொருத்தப்பட்டு, கோவை, திருச்சியில், 4 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.சேலம் அரசு மருத்துவ கல்லுாரியில் படித்த சுஜாதா, செல்-லவேல், ராஜேஷ் செங்கோடன், கலை அன்புசுடர், இதே கல்லுா-ரியில் துறைத்தலைவர்களாகவும், அருண்குமரன் பேராசிரியராகவும் பணியாற்று-வது போல் பட்டம் பெற்றவர்களும் பணியாற்றி கல்லுாரிக்கு சிறப்பு சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், துணை முதல்வர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட
பேராசிரியர்கள், இணை, துணை பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.