ADDED : செப் 11, 2024 07:09 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:
இந்தியாவில் உள்ள, 300 மில்லியன் கால்நடைகள் மூலம் ஏறக்-குறைய, 3 மில்லியன் டன் சாணம் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள, 9.5 மில்லியன் கால்நடைகள் மூலம் பெறப்படும் சாணத்தால் உற்பத்தி செய்யப்படும்
எரிவாயுவால், 2,000 டன் நிலக்கரி பயன்பாட்டை குறைக்க முடியும். சாண எரிவாயு அடுப்பு எரிக்க மட்டுமன்றி வெப்ப ஆற்றலாக மாற்றி மின்சாரம் உற்பத்தி செய்து விளக்குகளை எரிய செய்ய உதவுகிறது. சாண எரிவாயுவால்
விறகுக்கு மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும்.ஒரு பசு, தினமும் சராசரியாக, 10 கிலோ சாணம் போடும். ஒரு கிலோ சாணத்தில் இருந்து, 0.04 கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யலாம். 4 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு தினமும் தேவை-யான எரிவாயு உற்பத்தி செய்ய,
ஒரு கன மீட்டர் கலனில் 25 கிலோ சாணம் அல்லது சாண கரைசல் இருந்தால் போதுமானது. சாண எரிவாயு கலனில் இருந்து வெளியே வரும் செரித்த கரை-சலில், 1.5 சதவீத தழைச்சத்து, 1.5 சதவீத சாம்பல் சத்து, 1.2 சத-வீத
மணிச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை இயற்கை உரமாக பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற முடியும்.விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், சாண எரிவாயு கலன் அமைத்து சமையலுக்கு தேவையான எரிவாயு உற்பத்தி செய்வ-தோடு விலையில்லாமல் பயிர்களின் அதிக விளைச்சலுக்கு தேவையான இயற்கை உரம் பெற்று பயன்
பெறலாம்.