/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிப்பு
/
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிப்பு
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிப்பு
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிப்பு
ADDED : செப் 02, 2024 02:18 AM
சேலம்: தமிழக பிராமண சங்கம் சேலம் மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா, மரவனேரியில் உள்ள சங்கர மடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் கணேசன் பங்கேற்றார்.
அதில் சங்க உறுதிமொழி எடுத்-தபின் சங்க வளர்ச்சி பணி, ஆண்டறிக்கை குறித்து விவாதிக்கப்-பட்டது.
தொடர்ந்து, பிளஸ் 2, 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்-தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, 55 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, கேடயம் வழங்கி கவுரவித்தனர். சமூக ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி
வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆத்துார் உள்பட, 25 கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஈம காரியங்களுக்கு உதவ, 10 குடும்பத்துக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ''நீட் தேர்வை பிற மாநிலங்கள் எதிர்க்கவில்லை. தமிழகத்தில் மட்டும் திட்டமிட்டு எதிர்க்கப்படுகிறது. 'நீட்' தேர்வு குழந்தைக-ளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தவற
விடக்கூடாது,'' என்றார்.மாவட்ட பொதுச்செயலர் சரவணன், பொருளாளர் பஞ்சநாதன், இளைஞரணி செயலர் ராஜேஷ், மாநில பொருளாளர் ஜெயராம், மாநில ஆலோசகர் சாய்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.