/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திறமை இருந்தால் மண் அள்ளுங்கள் தி.மு.க., மாவட்ட செயலர் பகிரங்க பேச்சு
/
திறமை இருந்தால் மண் அள்ளுங்கள் தி.மு.க., மாவட்ட செயலர் பகிரங்க பேச்சு
திறமை இருந்தால் மண் அள்ளுங்கள் தி.மு.க., மாவட்ட செயலர் பகிரங்க பேச்சு
திறமை இருந்தால் மண் அள்ளுங்கள் தி.மு.க., மாவட்ட செயலர் பகிரங்க பேச்சு
ADDED : செப் 04, 2024 11:11 AM
ஆத்துார்: ''திறமை இருந்தால் மண் அள்ளிக் கொள்-ளுங்கள், மாட்டிக் கொண்ட பின் கட்சி காப்பாற்-றவில்லை என்று குறை சொல்லக் கூடாது,'' என, கெங்கவல்லியில், தி.மு.க., மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசினார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் நேற்று தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்-தது. இதில், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தை, அ.தி.மு.க., கோட்டை என்று, தி.மு.க.,வினர் யாரும் சொல்லக் கூடாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, அரசு அதிகாரிகள் தி.மு.க., மாவட்ட செயலர் உள்-ளிட்ட நிர்வாகிகளுக்கு தோழர்களாக தான் இருப்பர். சிலர் வாகனங்களில் மண் அள்ளிச் செல்கின்றனர். உங்களுக்கு திறமை இருந்தால், மண் ஓட்டிக் கொள்ளுங்கள். மாட்டிக் கொண்ட பின், நம்ம கட்சி காப்பாற்றவில்லை என, சொல்லி புலம்புதல் மற்றும் புகார் சொல்லக் கூடாது. தி.மு.க.,வினருக்கு, நான் எதையும் செய்து தருவதற்கு தயாராக இருக்கிறேன். இரண்டு பொறுப்புகள் உள்ளதை, மாற்றம் செய்-வதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. பத்திரிகையாளர்கள் இங்குள்ளதால், சில விஷ-யங்களை மைக்கில் பேச முடியாது.
அ.தி.மு.க., ஒன்றிய குழு தலைவராக இருந்த ப்ரியா, தி.மு.க.,வில் இணைந்தார். ஆனால், அவர் மீதும் தி.மு.க.,வினரே புகார் செய்ததால், தற்போது தி.மு.க.,வை சேர்ந்த நபர் தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கெங்க-வல்லி தொகுதியில், மீண்டும் தி.மு.க.,தான் போட்டியிடும். 30 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியா-சத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கோஷ்டி பூசல் இல்லாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் கோஷ்டி பிரச்னை இருந்தால், அவர்களே கட்சியை விட்டு ஒதுங்கி கொள்ளுங்கள்.இவ்வாறு பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, பேரூர் செயலர் பாலமுருகன், கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து தலைவர் லோகாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.