/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்வாயில் பாசன நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
/
கால்வாயில் பாசன நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
கால்வாயில் பாசன நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
கால்வாயில் பாசன நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
ADDED : ஆக 01, 2024 08:02 AM
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் திறக்கும் நீரால், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் இருந்து கால்வாயில் ஆண்டுதோறும் ஆக., 1 முதல் டிச., 15 வரை, தினமும் அதிகபட்சம், 1,000 கனஅடி வீதம், 137 நாட்கள், 9.5 டி.எம்.சி., நீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் நீர் திறக்கவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியதால் ஒரு நாள் முன்னதாக, நேற்று முன்தினம் மாலை கால்வாயில் வினாடிக்கு, 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று நீர்திறப்பு வினாடிக்கு, 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.