/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருடனை மடக்கிய போலீசாருக்கு பாராட்டு
/
திருடனை மடக்கிய போலீசாருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி போலீஸ் எல்லைக்குட்-பட்ட கொம்பாடிப்பட்டி பிரிவு அருகே போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி, வேணுகோபால், குமரேசன் ஆகியோர் வாகனச்-சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 'பல்சர்' பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் ஒருவரை பிடித்து விசா-ரித்ததில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன், 30, என தெரிந்தது. அவரை ஆட்டை-யாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசார-ணையில் அவர் மீது மதுரை, திருமங்கலம் உள்பட பல்வேறு ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவலறிந்த போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, திருடனை பிடித்த, 3 பேரையும் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.