/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 12,000 கனஅடியாக குறைப்பு
/
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 12,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 12,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 12,000 கனஅடியாக குறைப்பு
ADDED : ஆக 20, 2024 03:22 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்திறப்பு நேற்று வினாடிக்கு, 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 30ல் மேட்டூர் அணை முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணைக்கு நேற்று வினாடிக்கு, 12,210 கனஅடி நீர் வந்த நிலையில் கால்வாய் பாசனம் போக மீதம், 8,000 கனஅடி நீர், கபினியில்
வினாடிக்கு, 1,500 கனஅடி நீர் என மொத்தம், 9,500 கனஅடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வினாடிக்கு, 26,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்திறப்பு அன்று காலை, 7:30 மணிக்கு, 16,000 கனஅடியாகவும், நேற்று காலை, 8:30 மணிக்கு, 12,000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி, நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது. கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு குறைந்ததால், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் சரியும்.