sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பரந்துார் விமான நிலையம் மத்திய அரசு அனுமதி

/

பரந்துார் விமான நிலையம் மத்திய அரசு அனுமதி

பரந்துார் விமான நிலையம் மத்திய அரசு அனுமதி

பரந்துார் விமான நிலையம் மத்திய அரசு அனுமதி


ADDED : ஜூலை 24, 2024 07:48 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி-றது. சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்-துக்காக, பரந்துார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை உள்ள-டக்கி, 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசுக்கு சொந்தமான, 'டிட்கோ' எனப்படும், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு, சிவில் விமான போக்கு-வரத்து அமைச்சகத்துக்கு, டிட்கோ கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, பரந்துார் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்-துள்ளது. இந்த தகவலை, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சமீ-பத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இது தொடர்பாக, எழுத்து வாயிலாக அவர் அளித்த பதிலில், 'பசுமைவெளி விமான நிலைய கொள்கை - 2008ன்- படி, பரந்துார் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு, தமிழக அரசின் டிட்கோ சார்பில் மனு அளிக்கப்பட்டது.

'விரிவான ஆலோசனைகளுக்கு பின், பசுமைவெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு, ஜூலை 9ல், பரந்துார் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்தது' என, குறிப்பிடப்பட்-டுள்ளது.






      Dinamalar
      Follow us