ADDED : நவ 07, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் மாவட்டத்தில் கடந்த அக்., 23 முதல் பல்வேறு ஒன்றியங்-களில், 'மக்கள் சந்திப்பு' திட்ட முகாம்கள் நடந்து வருகின்றன. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்கிறார். கலெக்டர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
அதன்படி நாளை காலை, 9:00 மணிக்கு, காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்திலும், மதியம், 2:00 மணிக்கு ஓமலுார் தாசில்தார் அலுவலகத்திலும், மாலை, 4:30 மணிக்கு தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்திலும் மக்கள் சந்திப்பு முகாம் நடக்க உள்-ளது. இதில் மக்கள், மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.