/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல இடங்களில் குழாய் சேதம் குடிநீருக்கு பரிதவிக்கும் மக்கள்
/
பல இடங்களில் குழாய் சேதம் குடிநீருக்கு பரிதவிக்கும் மக்கள்
பல இடங்களில் குழாய் சேதம் குடிநீருக்கு பரிதவிக்கும் மக்கள்
பல இடங்களில் குழாய் சேதம் குடிநீருக்கு பரிதவிக்கும் மக்கள்
ADDED : ஆக 26, 2024 02:56 AM
மேட்டூர்: கொளத்துார் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சி, 10வது வார்டு, வாஞ்சி நகரில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர். அவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு முன், 10,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டி அமைத்து, காவிரி குடிநீர் வினி-யோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முதல்கட்டமாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள், மண்சாலையை தார்சா-லையாக மாற்றம் செய்யும்போது சேதமடைந்தன. அப்போது வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, 2022 - 23ல், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் ஊராட்சி துறை சார்பில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும், சாலையோரம் குறைந்த அடியில் பிளாஸ்டிக் குழாய் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களுக்கு முன், அப்பகுதியில் கனரக வாகனம் சென்றதால், சாலையோர குடிநீர் குழாய் பல இடங்களில் மீண்டும் சேதமடைந்தது. உடைந்த குழாய்கள் வழியே வெளியே-றிய தண்ணீர், ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கிறது.
தற்போது மக்கள், இரு சக்கர வாகனங்களில் சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி அடிவாரம் உள்ள குழாயில் குடிநீர் பிடித்து எடுத்துச்செல்கின்றனர். அதனால் குழாய் உடைப்பை சரி செய்து சீரான குடிநீர் வினியோகிக்க, உள்ளாட்சி அலுவலர்கள் நடவ-டிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

