/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வலிமையான பாரதம் உருவாக மாணவர்கள் தேவை: டி.ஐ.ஜி.,அறிவுரை
/
வலிமையான பாரதம் உருவாக மாணவர்கள் தேவை: டி.ஐ.ஜி.,அறிவுரை
வலிமையான பாரதம் உருவாக மாணவர்கள் தேவை: டி.ஐ.ஜி.,அறிவுரை
வலிமையான பாரதம் உருவாக மாணவர்கள் தேவை: டி.ஐ.ஜி.,அறிவுரை
ADDED : ஆக 13, 2024 08:01 AM
பனமரத்துப்பட்டி: ''வலிமையான பாரதம் உருவாக, வலிமையான மாணவர்கள் தேவை,'' என, சேலம் டி.ஐ.ஜி., உமா பேசினார்.
சேலம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சேலம் டி.ஐ.ஜி., உமா பேசியதாவது:
மாணவர்களுக்கு கம்யூனிகேஷன் தெளிவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதை கேட்பதும், நாம் படிக்கி-றதும், நமக்கு சொல்லி கொடுப்பதையும் 'பாலோ' பண்-ணினால்,அறிவை வளர்த்து கொள்ள முடியும். பள்ளிப்பாட பரு-வத்தில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை என்ன படிக்கி-றோமோ, அதுதான் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் அடிப்ப-டையாகும்.
எந்த வேலையும் குறைவானது, அதிகமானது கிடையாது. எல்-லாமே சமமான வேலைதான். உன்னுடைய வாழ்க்கை உன் கையில் இருப்பதால், இப்போதே இருந்தே கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் போதை பழக்கம் இல்லாதவர்களுடன், நட்பு வைத்துக் கொள்ள வேண்டும். போதை பொருட்கள் இருந்தால், விற்பனை நடந்தால் போலீசாருக்கு தகவல் தெரி-விக்க வேண்டும்.
நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு அப-ராதம் விதிக்கப்படும். ஒரு பைக்கில், 4, 5, 6, பேர் போவது சட்-டப்படி தவறு. அடிப்படை சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். வலிமையான பாரதம் உருவாக, வலியைமான மாணவர்கள் தேவை.
இவ்வாறு பேசினார்.
இதையடுத்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சவுந்திரராஜன், தலைமை ஆசிரியர் ஜான்கா-சிம்கான் ஆகியோர் பங்கேற்றனர்.
தாசநாயக்கன்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் சேலம் எஸ்.பி.,அருண்கபிலன், போதை தடுப்பு குறித்து மாணவர்க-ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

