/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருடிய மொபைலை கேட்ட போலீஸ் கோபுரத்தில் ஏறி மிரட்டிய தொழிலாளி
/
திருடிய மொபைலை கேட்ட போலீஸ் கோபுரத்தில் ஏறி மிரட்டிய தொழிலாளி
திருடிய மொபைலை கேட்ட போலீஸ் கோபுரத்தில் ஏறி மிரட்டிய தொழிலாளி
திருடிய மொபைலை கேட்ட போலீஸ் கோபுரத்தில் ஏறி மிரட்டிய தொழிலாளி
ADDED : செப் 02, 2024 02:19 AM
நங்கவள்ளி: நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர், மொபைல் போனை காணவில்லை என நேற்று முன்தினம் புகார் அளித்தார். ஐ.எம்.இ.ஐ., எண் மூலம் தேடியபோது நங்கவள்ளி, குள்ளா-னுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராதாகிருஷ்ணன், 40, வைத்தி-ருந்தது தெரிந்தது. அவரை தொடர்பு கொண்ட போலீசார், 'நீங்கள் வைத்திருப்பது திருட்டு போன். அதை ஸ்டேஷனில் கொண்டு வந்து கொடுங்கள்' என கூறினர். அவரும் வந்து ஒரு போனை கொடுத்துவிட்டு சென்றார்.
போலீசார் சோதனை செய்தபோது, அவர் கொடுத்தது திருடு-போன போன் இல்லை என தெரிந்தது. நேற்று மீண்டும் அவரை அழைத்து விசாரித்தபோது, 'இது எனது போன்' என கூறியுள்ளார். அதற்கு ரசீது கேட்டபோது இல்லை
என கூறினார். அதனால், 'திருடிய போனை கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு, உன் போனை வாங்கிச்செல்' என போலீசார் கூறி அவரை அனுப்பினர்.இதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன், மாலை, 5:30 மணிக்கு குள்ளானுார் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மொபைல் போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அங்கு சென்ற போலீசார், நங்கவள்ளி தீயணைப்பு
வீரர்களை உடனே வரவழைத்தனர். அரை மணி நேரத்தில் அவரை மீட்டனர்.பின் உரிய அறிவுரை வழங்கி போலீசார் ராதாகிருஷ்ணனை அனுப்பினர்.