/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு
/
புதிய குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு
புதிய குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு
புதிய குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு
UPDATED : ஜூலை 04, 2024 10:46 AM
ADDED : ஜூலை 02, 2024 07:01 AM
சேலம் : மத்திய அரசு அமல்படுத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள், நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. முதல்நாளான நேற்று, சேலம் மாவட்டத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சேலம், இடைப்பாடி, ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் குமார், 36, இவர் அரசு அனுமதியின்றி லாரியில் கல் ஏற்றி வந்ததாக, பி.என்.எஸ்., 303 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம் புது பஸ் ஸ்டாண்டில், தனியார் பஸ் டிரைவர்களிடையே, அடுத்து கிளம்ப வேண்டியது குறித்து தகராறு ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்திய பின்பும், தகராறில் ஈடுபட்டனர். இவர்கள் மீதும், பி.என்.எஸ்., 303 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆத்துார் போலீஸ் நிலைய எல்லையில், இரு தரப்பினர் தகராறு செய்த நிலையில், அவர்கள் மீதும், புதிய சட்டப்பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், நேற்று மூன்று வழக்குகள், புதிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.