/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரியில் வெள்ளப்பெருக்கு வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
/
காவிரியில் வெள்ளப்பெருக்கு வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
காவிரியில் வெள்ளப்பெருக்கு வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
காவிரியில் வெள்ளப்பெருக்கு வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
ADDED : ஆக 01, 2024 08:07 AM
இடைப்பாடி: மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதி-ரொலியாக, காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, மதிக்கிழான்-திட்டில், 10க்கும் மேற்பட்ட வீடுகளை, தண்ணீர் சூழ்ந்தது. தேவூர் பகுதிகளுக்கு செல்லும் குடிநீரேற்று நிலையத்தையும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு, 'பம்பிங்' நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேவூர் அருகே காவிரி கரையோர பகுதிகளில், 1,000 ஏக்-கரில் விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின. காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மின் மோட்டார் கிணறுகளும் மூழ்கின. சங்ககிரி ஆர்.டி.ஓ., சவுமியா, தாசில்தார் வாசுகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், அப்பகுதிக்கு சென்று காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பினர்.