sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பா.ஜ.,வை அழைத்து கருணாநிதி நாணய வெளியீடு ஏன்? அ.தி.மு.க., - இ.பி.எஸ்., விளக்கம்

/

பா.ஜ.,வை அழைத்து கருணாநிதி நாணய வெளியீடு ஏன்? அ.தி.மு.க., - இ.பி.எஸ்., விளக்கம்

பா.ஜ.,வை அழைத்து கருணாநிதி நாணய வெளியீடு ஏன்? அ.தி.மு.க., - இ.பி.எஸ்., விளக்கம்

பா.ஜ.,வை அழைத்து கருணாநிதி நாணய வெளியீடு ஏன்? அ.தி.மு.க., - இ.பி.எஸ்., விளக்கம்


ADDED : ஆக 26, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ''பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ள நிலையில், அரசை காப்பாற்-றிக்கொள்ள, மத்திய பா.ஜ., ஆட்சியின் தயவு தேவை என்ப-தற்கு, அவர்களை அழைத்து கருணாநிதி நாணயத்தை தி.மு.க.,வினர் வெளியிட்டுள்ளனர்,'' என்று, அ.தி.மு.க., பொது செயலர், இ.பி.எஸ்., குற்றம்

சாட்டினார்.

சேலம் மாவட்டம் ஓமலுாரில் இ.பி.எஸ்., நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில், பா.ஜ., மூத்த அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும், தி.மு.க., - காங்., கட்சியை சேர்ந்த சோனியா, ராகுல் உள்ளிட்ட கட்சி தலைவர்களை அழைக்கவில்லை. பல்-வேறு ஊழல் வழக்குகள் உள்ள நிலையில், தி.மு.க., அரசை காப்-பாற்றிக்கொள்ள, மத்திய பா.ஜ., ஆட்சியின் தயவு தேவை என்ப-தற்கு அவர்களை அழைத்து வெளியிட்டுள்ளனர். இதை சொன்னால், தி.மு.க., பா.ஜ.,வுக்கு கோபம் வருகிறது. இந்த விழாவை மத்திய அரசு நடத்துகிறது என முதல்வர் குறிப்-பிட்டார். எனக்கு வந்த அழைப்பிதழில் தமிழக அரசு முத்திரை உள்ளது. தலைமை செயலர் கையெழுத்திட்டுள்ளார். இது கூட தெரியாமல் முதல்வர் பேசியுள்ளார். இதை சொன்னதும், பா.ஜ., மாநில தலைவர் என்னை வசை பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவின்போது முதல்வராக இருந்த நான், எம்.ஜி.ஆர்., சிறப்பு நாணயத்தை வெளியிட்டேன். இதுகு-றித்து அண்ணாமலை சிறுமைப்படுத்தி பேசியுள்ளார். ஏதோ மத்-தியில் இருப்பவர்கள் வந்து வெளியிட்டால் தான் சிறப்பு என சிறு பிள்ளைத்தனமாக பேசியுள்ளார். வரலாறு தெரியாமல் அவர் பேசியுள்ளார். அவர் பிறப்பதற்கு முன்பே, எம்.ஜி.ஆர்., முதல்வ-ராக பணியாற்றி சிறப்பு பெற்றவர். அந்த நேரத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யாரும் தலைவர்களாக இல்லை. நாணய வெளியீட்டு விழாவில் கருணாநிதி குறித்து ராஜ்நாத் சிங் புகழாரம், யார் பேச சொன்னார்கள் என தெரியாது. அதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தி.மு.க., - பா.ஜ., நாட-கத்தை வெளிக்கொண்டு வந்தது ரஜினிதான்.

அ.தி.மு.க., ஊழலாட்சி என, அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்தபோது தெரியாதா? மேலவையில் பல மசோதாக்களுக்கு ஆதரவு கோரியபோது தெரியாதா? உறவு முடிந்ததும், அ.தி.மு.க.,வினர் கெட்டவர்களாக தெரிகின்றனரா? இதுதான் பா.ஜ.,வின் இரட்டை வேடம்.

மத்தியில், பா.ஜ., பொறுப்பேற்று, 10 ஆண்டுகளுக்கு பின் தற்-போது, 168 லட்சம் கோடி ரூபாய் இந்தியா கடனில் உள்ளது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்ததும், 500 நாட்களில், நுாறு திட்டங்களை கொண்டு வருவேன் என, அண்ணாமலை கோவையில் பேசினார். என்ன திட்டத்தை கொண்டு வந்தார். பேசுவதெல்லாம் பொய். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றெழுத்து மந்திரம்

நடிகர் விஜயின், த.வெ.க.,வின், மூன்றெழுத்து மந்திரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'எங்கள் கட்சி (எம்.ஜி.ஆர்.,) தலைவர் பெயரை, ஒரு கட்சியினர் குறிப்பிடும்போது எங்களுக்கு பெரு-மையாக உள்ளது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்,'' என்றார்.

'தொகுதி வாரியாக வக்கீல் நியமனம்'

சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க., வக்கீல் அணி பிரிவு ஆலோசனை கூட்டம், ஓமலுார் அருகே அக்கட்சி அலுவல-கத்தில் நேற்று நடந்தது. பொது செயலர் இ.பி.எஸ்., தலைமை வகித்து பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில் வக்கீல்கள் கோரிக்கையை ஏற்று, 5 லட்சம் ரூபாயாக இருந்த சேம நல நிதி, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 6 சட்டக்கல்லுாரிகள் கொண்டுவரப்பட்டன. 39 மாத கால தி.மு.க., ஆட்சியில், தமிழகத்துக்கு எந்த திட்டங்-களும் கொண்டு வரப்படவில்லை. தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை திற-மையான வாதங்களை கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும். சட்டசபை தொகுதி வாரியாக வக்கீல்கள் நியமிக்கப்பட உள்-ளனர். இதனால், அ.தி.மு.க., வரலாற்றில் நீங்களும் இடம்பெறு-வீர்கள். அனுபவம் முக்கியம். மூத்த வக்கீல்களின் ஆலோச-னையை கேட்டு திறம்பட செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, 280 வக்கீல்களுக்கு சட்டப்புத்தகம், சீருடையை, இ.பி.எஸ்., வழங்கினார்.

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் உள்பட, 300-க்கும் மேற்பட்டோர், வீரபாண்டி

எம்.எல்.ஏ., ராஜமுத்து, பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன் ஏற்பாட்டில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.






      Dinamalar
      Follow us