ADDED : ஜூலை 11, 2011 03:04 AM
மேட்டூர்: ஈரோடு மண்டல, மின்பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மேட்டூரில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் சம்பத்குமார் வரவேற்றார். மாநில செயலாளர் விஜயரங்கன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் தேவராஜன், துணை தலைவர் ரங்கராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவிபாபு, புகழேந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மின்கழகத்தில் பணிபுரியும், போனஸ் வழங்காத, 4 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிற்சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க., மேட்டூர் நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க ஈரேடு மண்டல தலைவர் பழனிச்சாமி, செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் கணேசன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.