ADDED : ஜூலை 15, 2011 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கந்தம்பட்டி பாலம் அருகே சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் முதியவர் பலியானார்.
சேலம் கந்தம்பட்டி அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(65). இவர் நேற்று காலையில் கந்தம்பட்டி பாலம் அருகே சேலம் - விருத்தாச்சலம் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த, ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனை பிண அறைக்கு அனுப்பி வைத்தனர்.

