ADDED : ஜன 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதான சாலைகள் 'வெறிச்'
சேலம் :பொங்கல் திருவிழாவையொட்டி, சேலத்தில் சில நாட்களாக புத்தாடை, பொங்கல் பொருட்கள் வாங்கவும், வெளியூரில் இருந்து ஊர் திரும்பும் பயணியராலும் பரபரப்பாக இருந்தது. பொங்கல், மாட்டுபொங்கல் நாட்களில் கூட, ஓரளவுக்கு வாகன போக்குவரத்து இருந்தது. கரிநாளான நேற்று, முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. கடைகளும் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும், 'பிஸி'யாக இருக்கும் ஓமலுார் பிரதான சாலை, சாரதா கல்லுாரி சாலை, 5 ரோடு, திருச்சி பிரதான சாலை ஆகியவை, வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. நகருக்குள் இயக்கப்படும் டவுன் பஸ்களிலும் மிக குறைந்த அளவிலேயே பயணியர் இருந்தனர். மாலை வரை, புது பஸ் ஸ்டாண்டிலும் பயணியர் கூட்டம் குறைவாகவே இருந்தது.