ADDED : ஜன 22, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தை திருமணம்தொழிலாளி கைது
மேட்டூர்,:ஈரோடு மாவட்டம் அந்தியூர், குருவரெட்டியூரை சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணன், 22. இவர், சேலம் மாவட்டம் கொளத்துார் அடுத்த கண்ணாமூச்சி, சாமியார்காட்டை சேர்ந்த, 12 வயது சிறுமியை காதலித்தார். கடந்த, 18ல் சிறுமி மாயமானதாக, அவரது பெற்றோர், கொளத்துார் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சிறுமியை லட்சுமணன், கடந்த, 19ல் திருமணம் செய்தது தெரிந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்த லட்சுமணனை, போலீசார் கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.