ADDED : பிப் 02, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரு பிறந்தநாள் கொண்டாட்டம்
சேலம், : பா.ம.க.,வின், சேலம் வடக்கு மாவட்டம் சார்பில், வன்னியர் சங்கத்தின், மறைந்த தலைவர் குருவின், 65வது பிறந்தநாள் விழா, அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார்.
மாநில மாணவர் சங்க செயலர் விஜயராசா, குரு படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின் அனைவருக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது. பேரூர் துணை செயலர் அறிவழகன், இளைஞரணி செயலர் சந்துரு, பேரூர் முன்னாள் செயலர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.