/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜே.எஸ்.டபுள்யு., நடத்தியவிழிப்புணர்வு மாரத்தான்
/
ஜே.எஸ்.டபுள்யு., நடத்தியவிழிப்புணர்வு மாரத்தான்
ADDED : பிப் 15, 2025 01:39 AM
ஜே.எஸ்.டபுள்யு., நடத்தியவிழிப்புணர்வு மாரத்தான்
மேட்டூர்:பொட்டனேரி ஜே.எஸ்.டபுள்யு., நிறுவனம் சார்பில், 'சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு' தலைப்பில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. கோபி மருத்துவமனை சேலம் மண்டல செயல் இயக்குனர் அசோக்குமார் தலைமை வகித்தார். சேலம் விமான நிலைய வானிலை அதிகாரி இளங்கோ, மேச்சேரி இன்ஸ்பெக்டர் மகேந்திரன், நங்கவள்ளி தீயணைப்பு, மீட்பு நிலைய அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தனர். போட்டியில் கல்வி நிறுவனத்தினர், உள்ளூர் பங்குதாரர்கள், 5 கி.மீ., ஓடினர்.
விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி, மேச்சேரி காவிரி கல்வி நிறுவன செயலர் இளங்கோவன், நந்தகுமார், மேட்டூர் அரசு ஐ.டி.ஐ., தொழில்நுட்ப முதன்மை அதிகாரி செல்வராஜ், ஜே.எஸ்.டபுள்யு., ஆலை துணைத்தலைவர் குமார், மனித வள துறைத்தலைவர் அரிராஜ், முதன்மை பாதுகாப்பு, சுற்றுசூழல் அதிகாரி சுரேஷ் சுந்தரம், சி.எஸ்.ஆர்., தலைவர் பாரதி
பங்கேற்றனர். 'பள்ளிகளில் அரசியல் கட்சி சாராதோருக்குபி.டி.ஏ., தலைவர் பதவி வழங்க வேண்டும்'
பனமரத்துப்பட்டி:''அரசு பள்ளிகளில், அரசியல் கட்சியை சாராதவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவியை வழங்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநில துணைத்
தலைவர் ராமலிங்கம் வலியுறுத்தி உள்ளார்.பா.ஜ.,வின், சேலம் லோக்சபா தொகுதி அலுவலகத்தில், அக்கட்சி மாநில துணைத்
தலைவர் ராமலிங்கம், நேற்று அளித்த பேட்டி:
மத்திய அரசின், 12வது நிதி நிலை அறிக்கை, தேசத்தின், 50 ஆண்டு தொலைநோக்கு திட்டங்கள், வளர்ச்சி, கட்டமைப்பு திட்டங்களாக போடப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பட்ஜெட் போடவில்லை. தேச வளர்ச்சிக்கு போடப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடுவதால், விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆத்துார் அருகே, 14 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதில், தி.மு.க.,வின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து பேசி உள்ளனர். 8 நாட்களுக்கு பின், மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலுக்கு பின், போலீசார் வழக்குப்பதிந்தனர். அந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் செய்யப்படும்.
அரசு பள்ளிகள் சீர் கெட்டதற்கும், பள்ளி அருகே போதை பொருள் விற்பனைக்கும், பாலியல் புகார் உருவாவதற்கும், பி.டி.ஏ., தலைவராக தி.மு.க.,வினர் இருப்பதுதான். அதனால் அரசு பள்ளிகளில், அரசியல் கட்சி சாராதவர்களை, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவராக போட
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட தலைவர்கள் சண்முகநாதன்(சேலம் கிழக்கு), ஹரிராமன்(மேற்கு), மாவட்ட முன்னாள் தலைவர் சுதிர்
முருகன், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் நிர்மலா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.