தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமாரத்தான் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமாரத்தான் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமாரத்தான் போட்டி


ADDED : பிப் 23, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுமாரத்தான் போட்டி

ஏற்காடு:ஏற்காட்டில் வனத்துறை சார்பில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலர் காஷ்ய ஷஷாங் ரவி தொடங்கி வைத்தார். சேலம் ஊரக டி.எஸ்.பி., தேன்மொழி வேல், போட்டியில் ஓடினார். மலைப்பாதை, 20வது கொண்டை ஊசி வளைவில் தொடங்கி, ஒண்டிக்கடை ரவுண்டானா, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன், ஜெரீனாக்காடு வழியே, சூழல் சுற்றுலா பூங்கா வரை, 5.5 கி.மீ., ஓடினர்.

இதில் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், உள்ளூர் இளைஞர்கள், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ஓடினர். மாணவர் நிஷாந்த், 22.39 நிமிடத்தில் ஓடி, முதலிடம் பிடித்தார்.

சஞ்சய், தீபக், சுதர்சன், நிர்மல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு சான்றிதழுடன் கோப்பை வழங்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், பயிற்சி உதவி வன பாதுகாவலர் கீர்த்தனா, ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us