ADDED : மார் 02, 2025 01:27 AM
முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
இடைப்பாடி:முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்தநாள் விழா, இடைப்பாடியில், தி.மு.க., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. நகர அவைத்தலைவர் மாதையன் தலைமை வகித்தார்.
அதில், 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு இனிப்பு வழங்கி, கட்சியினர் கொண்டாடினர். நகர துணை செயலர்கள் வடிவேல், சாமியப்பன், பொருளாளர் ராஜமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கொங்கணாபுரத்தில், தி.மு.க., ஒன்றிய செயலர் பரமசிவம், டவுன் பஞ்சாயத்து செயலர் அர்த்தனாரீஸ்வரன் உள்ளிட்ட கட்சியினர், இனிப்பு வழங்கினர்.
தாரமங்கலம் நகர செயலர் குணசேகரன் தலைமையில் கட்சியினர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அறுசுவை உணவுஆத்துார் வெள்ளை விநாயகர் கோவிலில், துாய்மை பணியாளர் உள்பட, 300க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின், உறுப்பினர்கள் சித்ரா, குகன், சிவக்குமார், மதுரைமேகம், கவுன்சிலர் ஜீவா உள்பட பலர் பங்கேற்றனர்.
கெங்கவல்லி பேரூர் சார்பில், பேரூர் செயலர் பாலமுருகன் தலைமையில் இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டவுன் பஞ்சாயத்து தலைவி லோகாம்பாள், துணைத்தலைவி மருதாம்பாள், கவுன்சிலர்கள்
பங்கேற்றனர்.
சிக்கன் பிரியாணி
ஆத்துார், மாதா கோவில் பகுதியை சேர்ந்த, தி.மு.க.,வின், நகர இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் வேல்முருகன், 50. இவரது மனைவி புவனேஸ்வரி, நகர துணை செயலராக உள்ளார். இவர்கள், ராணிப்பேட்டையில் பிரியாணி கடை வைத்துள்ளனர். நேற்று முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 500 பேருக்கு இலவசமாக 'சிக்கன்' பிரியாணி, முட்டை, ஆட்டுக்கால் சூப் வழங்கினர்.
தி.மு.க., நகர செயலர் பாலசுப்ரமணியம், பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் ஆத்துார், 9வது வார்டில், தி.மு.க., கவுன்சிலர் பாஸ்கர், 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார்.