/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர், கண்டக்டருக்கு நீர்மோர் வழங்கல்
/
டிரைவர், கண்டக்டருக்கு நீர்மோர் வழங்கல்
ADDED : மார் 27, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிரைவர், கண்டக்டருக்கு நீர்மோர் வழங்கல்
சேலம்:சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள, 26 பஸ் ஸ்டாண்டுகளிலும் நேற்று முதல் டிரைவர், கண்டக்டர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்து பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு, ஓ.ஆர்.எஸ்., பவுடர் பாக்கெட்கள் வழங்கப்படுகின்றன.
இது கோடை காலம் முடியும் வரை தினமும் மதியம், 12:00 முதல், 3:00 மணி வரை, 26 பஸ் ஸ்டாண்டுகளிலும் வழங்கப்படும் என்பதால், தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.