/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனமரத்துப்பட்டி ஏரி பணிகமிஷனர் ஆலோசனை
/
பனமரத்துப்பட்டி ஏரி பணிகமிஷனர் ஆலோசனை
ADDED : ஏப் 02, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி ஏரி பணிகமிஷனர் ஆலோசனை
சேலம்,:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது தண்ணீரின்றி வறண்டுள்ள நிலையில், விவசாய சங்கத்தினர், ஊர் மக்கள் ஆலோசித்து போராட முடிவு செய்ததாக, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், பனமரத்துப்பட்டி ஏரியை ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து ஆலோசித்தார். மாநகர பொறியாளர் செந்தில்குமார், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.