தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்


ADDED : ஏப் 09, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

சங்ககிரி:சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலையில் உள்ள சிவியார் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம், 25ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதன், 15ம் நாளை ஒட்டி, ஈஸ்வரன் கோவில் எதிரே உள்ள குளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பூங்கரகங்களை எடுத்துக்கொண்டும், முக்கிய வீதிகள் வழியே சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பக்தர்கள் வழிபட்டனர். இன்று பொங்கல் விழா, நாளை கம்பம் எடுத்து கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராடுதல் வைபவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us