sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

/

மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஏப் 10, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

வாழப்பாடி:வாழப்பாடி, கொட்டவாடி பிரிவு சாலை அருகே, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவுக்கு, கடந்த, 25ல் கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் நடந்தது.

நேற்று முன்தினம் ஊர் மாரியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, சின்னகிருஷ்ணாபுரத்தில் இருந்து புதுப்பட்டி மாரியம்மன் கோவிலை அடைந்தது.

நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், புதுப்பட்டி மாரியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, உடலில் அலகு குத்தி, பூங்கரகம், அக்னி கரகம் எடுத்தும், உருளுதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை, 5:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள், கோவிலை சுற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு தெருக்கூத்து நடந்தது. தொடர்ந்து இன்று, தேரை இழுத்து, நிலை நிறுத்தப்படுகிறது. நாளை கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us