/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்ப் சட்ட விவகாரம்இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
வக்ப் சட்ட விவகாரம்இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 10, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வக்ப் சட்ட விவகாரம்இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சேலம்:வக்ப் சட்ட திருத்தத்தை கண்டித்து, சேலம், கோட்டை, ஸ்டேட் வங்கி முன், இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் மோகன் தலைமை வகித்து பேசுகையில், ''வக்ப் திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெறுவதோடு, சிறுபான்மையின மக்களுக்கு இடையூறு செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்த்தியதை உடனே ரத்து செய்ய வேண்டும்,'' என்றார். மாநில குழு உறுப்பினர் தினேஷ், மாவட்ட பொருளாளர் கண்ணன், துணை செயலர்கள் கந்தன், ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

