நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தை சேர்ந்த, முனியன் மனைவி ராதா, 37. கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ராதா, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கூலி வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் அருகே, நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பைக் மோதி ராதா படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். ராதாவின் தந்தை மாரி புகார்படி, விபத்து ஏற்படுத்திய பைக் குறித்து, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.