/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருவிழாவுக்கு அனுமதி: தாசில்தாரிடம் வலியுறுத்தல்
/
திருவிழாவுக்கு அனுமதி: தாசில்தாரிடம் வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2025 01:28 AM
ஆத்துார், ஆத்துார், அப்பமசமுத்திரம் ஊராட்சி நரிகுறத்தி பள்ளம் மாரியம்மன் கோவிலில், 2023ல் திருவிழா ஏற்பாடு செய்த நிலையில், இருதரப்பினர் இடையே பிரச்னையால் நிறுத்தப்பட்டது. 2024ல், கோவிலை வருவாய்த்துறையினர் பூட்டினர்.
இந்நிலையில் நேற்று, 100க்கும் மேற்பட்டோர், ஆத்துார் தாலுகா அலுவலகம் வந்து, திருவிழா நடத்த அனுமதி கேட்டு, தாசில்தார் பாலாஜியிடம் மனு அளித்தனர்.
அப்போது, 'கோவிலில் விழா குழு அமைத்து, திருவிழா நடத்த முடிவு செய்துள்ளோம். உரிய அனுமதி வழங்க வேண்டும்' என்றனர்.
தாசில்தார் பாலாஜி, 'இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்திய பின், திருவிழா குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். பின் அனைவரும் கலைந்து
சென்றனர்.