/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்வேறு புகார்களால் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
/
பல்வேறு புகார்களால் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ADDED : அக் 26, 2025 01:17 AM
சேலம், சேலம், அழகாபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தவமணி. இவர் ஏற்கனவே, அஸ்தம்பட்டியில் பணியாற்றியபோது, புகாரால் அழகாபுரத்துக்கு இடமாற்றப்பட்டார்.
இந்நிலையில் பெண் வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை ஜாமினில் விடுவித்தது; 'ஸ்பா', கஞ்சா, லாட்டரி, சந்துக்கடை வியாபாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு பெயரளவுக்கு நடவடிக்கையில் ஈடுபட்டது ஆகிய புகார்கள் குறித்த விசாரணையில், தவமணி, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டது தெரிந்தது.
மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ., வீரகுமார், ஏட்டு செல்லக்கண்ணு ஆகியோரையும், ஆயுதப்படைக்கு இடமாற்றி, போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி, நேற்று உத்தரவிட்டார்.

