/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய குற்றப்பிரிவு தற்காலிக இடமாற்றம்
/
மத்திய குற்றப்பிரிவு தற்காலிக இடமாற்றம்
ADDED : அக் 30, 2025 02:24 AM
சேலம், சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன்புறம், மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் உள்ளது. ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்ட, அதன் கட்டடத்தை இடிக்க வேண்டாம் என அதிகாரிகள் திட்டமிட்டனர். சமீபத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, அங்கு ஆய்வு செய்தபோது, மழைக்காலங்களில் கட்டடத்தில் நீர் கசிவதால் சீர் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி சீரமைப்பு பணி தொடங்க உள்ளதால், மத்திய குற்றப்பிரிவு அலுவலகம், சேலம், குகை புலிக்குத்தி சந்திப்பு அருகே, தமிழ்நாடு கிராம வங்கி எதிரே, தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்டட பராமரிப்பு பணி முடிந்ததும், மீண்டும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் இடத்துக்கே மாற்றப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.A

