ADDED : ஜூலை 15, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே பாரப்பட்டி ஊராட்சி மேச்சேரியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 58.
நேற்று கொண்டலாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில், 78 மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிய அவர், கூடுதல் விலைக்கு விற்க, மொபட்டில் எடுத்துக்கொண்டு, ஏர்வாடி மேட்டுக்கடை அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த மல்லுார் போலீசார், அவரை பிடித்து கைது செய்தனர். மதுபாட்டில், மொபட்டை பறிமுதல் செய்தனர்.
