/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹெல்மெட் அணியாததால் 144 பேர் சாவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் தகவல்

ADDED : ஜன 30, 2025 01:09 AM
ஹெல்மெட் அணியாததால் 144 பேர் சாவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் தகவல்
சேலம்:சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சேலம் குகை, ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'ஹெல்மெட் இல்லையெனில் சாவி இல்லை' எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில், சாலை விதிகளை முழுமையாக பின்பற்றாத வாகன ஓட்டிகளால், பல்வேறு விபத்துகளில், 788 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஹெல்மெட் அணியாமல் சென்று, 144 பேர் இறந்துள்ளனர். அதனால் குழந்தைகள், பெற்றோர் பாதுகாப்பு கருதி, ஹெல்மெட்
இல்லையென்றால் சாவியை எடுக்க விடாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பேசுகையில், ''கடந்த ஆண்டில் இருசக்கர வாகனங்களில் பயணித்து சாலை விபத்தில் இறந்த, 144 பேரில், 32 பேர் பின்புறம் அமர்ந்து சென்றவர்கள். ஓட்டுனர் மட்டுமின்றி, வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும்,'' என்றார்.
துணை கமிஷனர் வேல்முருகன், வட்டா போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன், ரகுபதி, மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக 5 ரோடு பகுதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலெக்டர், கமிஷனர், வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.