sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மானியத்தில் 2,000 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு125 பெண்களுக்கு வழங்கி அமைச்சர் துவக்கிவைப்பு

/

மானியத்தில் 2,000 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு125 பெண்களுக்கு வழங்கி அமைச்சர் துவக்கிவைப்பு

மானியத்தில் 2,000 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு125 பெண்களுக்கு வழங்கி அமைச்சர் துவக்கிவைப்பு

மானியத்தில் 2,000 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு125 பெண்களுக்கு வழங்கி அமைச்சர் துவக்கிவைப்பு


ADDED : மார் 09, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானியத்தில் 2,000 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு125 பெண்களுக்கு வழங்கி அமைச்சர் துவக்கிவைப்பு

சேலம்:சேலம் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக வளாகத்தில், மானிய விலையில் நாட்டின கோழிக்குஞ்சுகளை, அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வழங்க, ஏைழ

ஆதரவற்ற பெண்கள் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: மாவட்டத்தில், 2024 - 25ல், இருந்து கால்நடை பராமரிப்புத்துறை மூலம், கிராமங்களில் வசிக்கும் ஏழை கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஒரு பயனாளிக்கு, 50 சதவீத மானியத்தில், 40 நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன.

சேலம், மேட்டூர், ஆத்துார், சங்ககிரி கோட்டங்களில் ஒன்றியத்துக்கு, 100 பயனாளிகள் வீதம், 20 ஒன்றியங்களில், 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. அதன் ஒரு

பகுதியாக, 125 பயனாளிக்கு, நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில், 12 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் இயங்கி வருகின்றன. தற்போது மேலும், 3 ஊர்திகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கால்நடை மருந்தகம் இல்லாத கிராமங்களுக்கும், கால்நடை மருத்துவ சேவை, அந்தந்த இடத்தில் கிடைப்பதன் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம். வார நாட்களில் ஞாயிறு தவிர, பிற நாட்களில் காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றிய பகுதியில், கால்நடைகளுக்கு சேவைகள் வழங்கப்படும். அவசர அழைப்புக்கு, 1962 என்ற எண்ணில் தொடர்புகொண்டால் மதியம், 3:00 முதல், 5:00 மணி வரை நடமாடும் வாகன மருத்துவ சேவையை பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us