/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு துறை தேர்வுக்கு 24 வரை விண்ணப்பிக்கலாம்
/
அரசு துறை தேர்வுக்கு 24 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 05, 2025 01:36 AM
அரசு துறை தேர்வுக்கு 24 வரை விண்ணப்பிக்கலாம்
சேலம்:தமிழகத்தில் வருவாய், பள்ளிக்கல்வி உள்ளிட்ட அரசு துறைகளில் பணிபுரிவோருக்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் துறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு மே, 19ல், இத்தேர்வு தொடங்க உள்ளது. 19 முதல், 23 வரை கணினி வழி தேர்வும், மே 26 முதல், 29 வரை, விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகள் நடக்க உள்ளன. இத்தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஏப்., 24 இரவு, 11:59 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், பதிவு செய்யும்போது ஒவ்வொரு தேர்வுக்கும், 200 ரூபாய் தேர்வு கட்டணம், 30 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

