/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா
/
24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா
24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா
24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு கால்கோள் விழா
ADDED : ஆக 01, 2024 08:02 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார், கோட்டமேட்டுப்பட்டியில், 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில், மாநில மாநாடு, வரும், 16ல் நடக்க உள்ளது.
அதில் கல்வி பரிசளிப்பு, மணமாலை, வேலைவாய்ப்பு, சமுதாய பெரியவர்களை கவுரவித்தல், சாதனை புரிந்தவர்களை பாராட்-டுதல், விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு பாராட்டு விழா உள்-ளிட்டவை நடக்க உள்ளன. இதற்கு பிரமாண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, மேடை, பந்தல் அமைக்க கால்கோள் விழா நடந்தது. அதில், நிறுவன தலைவர் ஜெகநாத் மிஷ்ராவுக்கு, சங்கம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜை, கால்கோள் விழா நடந்தது. இதில் மாநில தலைவர் தமிழ்செல்வன், இளைஞரணி தலைவர் மணி, ஒருங்கி-ணைப்பாளர் செந்தில், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.