ADDED : ஜூலை 24, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், சங்கர் நகரை சேர்ந்தவர், 28 வயது பெண். இன்ஜினி-யரிங் பட்டதாரி. இவரது வாட்ஸாப்புக்கு கடந்த, 20ல் குறுந்த-கவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறியிருந்-ததால், அப்பெண், அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மர்ம நபர், பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறினார்.
அதை நம்பிய பெண், மர்ம நபர் தெரிவித்தபடி அவர் கூறிய வங்கி கணக்கில் பல தவணைகளாக, 4.82 லட்சம் ரூபாயை செலுத்தினார். வேலை கிடைக்காத நிலையில், பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட-போது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஏமாற்றப்-பட்டதை உணர்ந்து, அப்பெண், நேற்று முன்தினம் அளித்த புகார்-படி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.