/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது டயர் 5 நாளில் வெடித்ததால்கடை முன் டிரைவர் போராட்டம்
/
புது டயர் 5 நாளில் வெடித்ததால்கடை முன் டிரைவர் போராட்டம்
புது டயர் 5 நாளில் வெடித்ததால்கடை முன் டிரைவர் போராட்டம்
புது டயர் 5 நாளில் வெடித்ததால்கடை முன் டிரைவர் போராட்டம்
ADDED : மார் 06, 2025 01:53 AM
புது டயர் 5 நாளில் வெடித்ததால்கடை முன் டிரைவர் போராட்டம்
ஆத்துார்:கெங்கவல்லி அருகே தெடாவூர், மணக்காட்டை சேர்ந்தவர் செல்வக்குமார், 39. டிரைவரான இவர், மினி சரக்கு வேன் வைத்துள்ளார். கடந்த பிப்., 10ல், ஆத்துார், மந்தைவெளியில் உள்ள தனியார் கடையில், இரு டயர்களை வாங்கிச்சென்றார். கடந்த, 16ல், ஒரு டயர் வெடித்து சேதம் அடைந்தது. இதனால் கடைக்கு வந்து கேட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தெரிவித்து, மாற்று டயர் குறித்து தெரிவிக்கப்படும் என்றனர்.
நேற்று, மதியம், 2:00 மணிக்கு, செல்வக்குமார், மீண்டும் கடைக்கு சென்று கேட்டார். அப்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் மாற்று டயர் வழங்கவில்லை என தெரிவித்ததால், செல்வக்குமார் கடை எதிரே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேதமடைந்த டயருடன், தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆத்துார் டவுன் போலீசார், செல்வக்குமாரிடம் பேச்சு நடத்தினார். தொடர்ந்து டயர் கடையினர், மாற்று டயர் தருவதாக உறுதி அளிக்க, செல்வக்குமார் போராட்டத்தை கைவிட்டார்.