/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
6 ஊராட்சி செயலர் இடமாற்றம் நிறுத்தம்
/
6 ஊராட்சி செயலர் இடமாற்றம் நிறுத்தம்
ADDED : ஜூலை 07, 2024 01:24 AM
மேட்டூர், : கொளத்துாரில், 14 ஊராட்சிகள் உள்ளன. அதில் லக்கம்பட்டி, நவப்பட்டி, மூலக்காடு, தின்னப்பட்டி, கண்ணாமூச்சி, பாலமலை ஊராட்சி செயலர்கள் முறையே வெங்கடேஷ், கணேசன், பிரபா-கரன், பெரியசாமி, சசிகுமார், மகாலிங்கம் உள்ளனர். அவர்கள், 6 பேரும் முறையே நவப்பட்டி, தின்னப்பட்டி, லக்கம்பட்டி, மூலக்-காடு, பாலமலை, கண்ணாமூச்சி ஊராட்சிகளுக்கு இடமாற்றி, கடந்த ஏப்., 26ல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உத்தர-விட்டார். தொடர்ந்து லோக்சபா தேர்தல் வர, இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்தும் இடமாற்-றப்படவில்லை.
இதுகுறித்து கொளத்துார் ஒன்றிய கமிஷனர் அண்ணாதுரை கூறு-கையில், ''உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், ஊராட்சிகளில் அதற்குரிய கணக்கெடுப்பு பணி செய்ய வேண்டும். இதனால், ஊராட்சி செயலர் இடமாற்றம், கலெக்டர் அறிவுரைப்படி நிறுத்தி-வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.