/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மறு ஆய்வில் சேலம் தொகுதியில் 78.16 சதவீத ஓட்டுப்பதிவு
/
மறு ஆய்வில் சேலம் தொகுதியில் 78.16 சதவீத ஓட்டுப்பதிவு
மறு ஆய்வில் சேலம் தொகுதியில் 78.16 சதவீத ஓட்டுப்பதிவு
மறு ஆய்வில் சேலம் தொகுதியில் 78.16 சதவீத ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 21, 2024 02:23 AM
சேலம்:சேலம்
லோக்சபா தொகுதியில் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது.
அதில், 78.13 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தகவல் கொடுக்கப்பட்டது.
நேற்று மறு ஆய்வு செய்து துல்லியமாக மதிப்பீடு செய்ததில், 78.16
சதவீதம் பதிவாகி உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது. இதன்மூலம், 0.03
சதவீதம் ஓட்டு அதிகரித்துள்ளது.
மொத்த வாக்காளர், 16,58,681
பேர். இவர்களில், 12,96,481 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது, 78.16
சதவீதம். ஓட்டுப்போடாதவர்கள், 3,62,200 பேர். இது, 21.83 சதவீதம்.லோக்சபாவில்
மொத்தமுள்ள, 8,28,152 ஆண்களில், 6,55,596 பேர்
ஓட்டுப்போட்டுள்ளனர். இது, 79.16 சதவீதம். ஓட்டுப்போடாதவர்,
1,72,556 பேர். இது, 20.83 சதவீதம்.
பெண்கள், 8,30,307 பேரில்
ஓட்டுப்போட்டவர், 6,40,780 பேர். இது, 77.17 சதவீதம்.
ஓட்டுப்போடாதவர், 1,89,527 பேர். இது, 22.82 சதவீதம்.
திருநங்கையர், 222 பேரில் ஓட்டுப்போட்டவர், 105 பேர். 117 பேர்
ஓட்டுப்போடவில்லை. அதிகபட்சம் இடைப்பாடியில், 84.71 சதவீதம்,
குறைந்தபட்சம் சேலம் வடக்கில், 70.59 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
ஓமலுார் சட்டசபை தொகுதி
லோக்சபாவுக்கு
உட்பட்ட ஓமலுார் சட்டசபை தொகுதியில், 1,51,313 ஆண்
வாக்காளர்களில், 1,26,241 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது, 83.43
சதவீதம். 25,072 பேர் ஓட்டுப்போடவில்லை.
பெண் வாக்காளர்களில்,
1,44,332 பேரில் ஓட்டுப்போட்டவர், 1,18,931 பேர். இது, 82.40
சதவீதம். ஓட்டுப்போடாதவர், 25,401 பேர். திருநங்கையர், 10 பேரில், 3
பேர் ஓட்டுப்போட்டுள்ளனர்.
இடைப்பாடி
இடைப்பாடியில்,
1,44,264 ஆண்களில், 1,22,690 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது, 85.04
சதவீதம். 21,574 பேர் ஓட்டுப்போடவில்லை. பெண்கள், 1,40,468ல்,
1,18,516 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது, 84.37 சதவீதம்.
ஓட்டுப்போடாதவர், 21,952 பேர். திருநங்கையர், 20 பேரில், 10 பேர்
ஓட்டுப்போட்டனர்.
சேலம் மேற்கு
சேலம் மேற்கில் ஆண்கள், 1,49,420
பேரில், 1,07,474 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 71.92 சதவீதம்.
ஓட்டுப்போடாதவர், 41,946 பேர். பெண்கள், 1,50,845ல்
ஓட்டுப்போட்டவர், 1,04,827 பேர். இது, 69.49 சதவீதம்.
ஓட்டுப்போடாதவர், 46,018 பேர். திருநங்கையர், 69 பேரில், 40 பேர்
ஓட்டுப்போட்டனர்.
சேலம் வடக்கு
சேலம் வடக்கில் ஆண்கள்,
1,31,304ல், 94,667 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 72.09 சதவீதம். 36,637
பேர் ஓட்டுப்போடவில்லை. பெண்கள், 1,38,112ல் ஓட்டுப்போட்டவர்,
95,527 பேர். இது, 69.16 சதவீதம். ஓட்டுப்போடாதவர், 42,585 பேர்.
திருநங்கையர் 46ல், 15 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர்.
சேலம் தெற்கு
சேலம்
தெற்கில் ஆண்கள், 1,22,506ல், 94,260 பேர் ஓட்டுப்போட்டனர். இது,
76.94 சதவீதம். ஓட்டுப்போடாதவர், 28,246 பேர். பெண்கள், 1,28,067
பேரில், 94,904 ஓட்டுப்போட்டவர்கள். இது, 74.10 சதவீதம். 33,163 பேர்
ஓட்டுப்போடவில்லை. திருநங்கையர், 54ல், 29 பேர்
ஓட்டுப்போட்டனர்.
வீரபாண்டி
வீரபாண்டியில் ஆண்கள்,
1,29,345ல், 1,10,264 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 85.24 சதவீதம்.
19,081 பேர் ஓட்டுப்போடவில்லை. பெண்கள், 1,28,483 பேரில், 1,08,075
பேர் ஓட்டுப்போட்டனர். இது, 84.11 சதவீதம். ஓட்டுப்போடாதவர்,
20,408 பேர். திருநங்கையர், 23ல், 8 பேர் ஓட்டுப்போட்டனர்.

